மகிந்தவைச் சந்தித்தார் எரிக் சொல்ஹெய்ம்!!


சிறீலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டமைக்காக நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்முக்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

அத்துடன்  எரிக் சொல்ஹெய்மின்  புதிய பொறுப்புக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்.

கொழும்பில் இன்று  சொல்ஹெய்ம் மற்றும் ராஜபக்சவை சந்தித்து உரையாடினர். இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தையாளராக சொல்ஹெய்ம் இலங்கைக்கு ஆற்றிய பங்களிப்பை நினைவுகூர்ந்தார். 

இலங்கையின் உள்நாட்டு மோதலின் போது இலங்கையின் பொருளாதாரத்தில் மோதலினால் ஏற்பட்ட எதிர்மறையான தாக்கங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

முன்னாள் நோர்வே அமைச்சர் இலங்கையில் தங்கியிருந்த போது, ​​நோர்வே முதலீட்டாளர்களை தீவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.  குறிப்பாக நீலப் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவினார்.

கடல்சார் திட்டங்களை அபிவிருத்தி செய்வதில் நோர்வே முக்கிய பங்காற்ற முடியும் என்று தெரிவித்த ராஜபக்ச, அத்தகைய முக்கிய திட்டங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் வழங்கும் என்றும் கூறினார்.

இலங்கைக்கு நோர்வேயின் ஆதரவை சொல்ஹெய்ம்  ராஜபக்சவிற்கு உறுதியளித்ததுடன், இரு நாடுகளும் எவ்வாறு ஒன்றிணைந்து முன்னேறுவது என்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.


No comments