அரசியல் தீர்வை வலியுறுத்தி 73 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழ் மக்களின் உரிமையை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசுக்கும் நட்பு நாடான இந்தியாவுக்கும் சர்வதேச நாடுகளுக்கும்

வலியுறுத்தும் முகமாக வடக்கு கிழக்கு வாழ் மக்கள் தமது சாத்வீகமான ஜனநாயகமான நூறுநாட்கள் செயல்முனைவின் விழப்புணர்வு போராட்டம் ஆவணி மாதம் முதலாம் திகதி ஆரம்பித்து இன்று 73 ஆவது நாளை எட்டியுள்ளது.

இன்று புதன்கிழமை (12) காலை 9.45 மணி அளவில் மன்னார் பஜார் பகுதியில் மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கான இணையத்தின் ஒழுங்கமைப்பில் அதன் மாவட்ட இணைப்பாளர் சகாயம் திலீபன் தலைமையில் விழிப்புப் போராட்டம் இடம்பெற்றது.

கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்' எனும் தொனிப் பொருளில் வடக்கு - கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் நடைபெற உள்ள செயல் திட்டத்தின் 73 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இச் செயல் முனைவின் 73 ஆவது நாள் மன்னார் நகரில் பிரதேச பகுதியிலிருந்து நாலா பக்கங்களிலிருந்தும் வந்த மக்கள் தங்கள் உரிமைகளுக்கான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments