ப்பர் முஸ்லிம் அமைப்புக்கும் தடை!



அதிவிசேட  வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியை சேர்ந்த சுப்பர் முஸ்லிம் அமைப்பின் தலைவர் டாக்டர் கே.எல்.எம். ரயீஸ் என்பவரது பெயரும் இடம்பெற்றுள்ளது.

2026 ஆண்டு ஜனவரி 06ஆம் திகதி வெளியிடப்பட்ட பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியல் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.  

1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சட்டத்தின் கீழ் பெயரிடப்பட்ட நபர்கள்  குழுக்கள் மற்றும் அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியல் அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

இதே வேளை இலங்கையில் 2021.04.13 ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ச இருந்த போது  11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்வது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.

இதற்கமைய பின்வரும் அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தன.


1. ஐக்கிய தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (UTJ)


2. சிலோன் தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (CTJ)


3. ஸ்ரீலங்கா தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (SLTJ)


4. அகில இலங்கை தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (ACTJ)


5. ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா (JASM) மறுபெயர் ஜம்மாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹமதியா ஒழுங்கமைப்பு மறுபெயர் அகில இலங்கை ஜம் - ஈ - அது அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா மறுபெயர் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா கழகம்  மறுபெயர் ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா


6. தாறுல் அதர் மறுபெயர் ஜாமிஉல் அதர் பள்ளிவாசல் மறுபெயர் தாறுல் அதர் குரான் மத்ரச மறுபெயர் தாறுல் அதர்அத்தபாவிய்யா


7. ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம்  (SLISM) மறுபெயர் ஜம்இய்யா


8. ஈராக்  மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு (ISIS) மறுபெயர் அல் - தௌலா அல்  - இஸ்லாமியா தௌலா இஸ்லாமியா


9. அல்கய்தா அமைப்பூ


10. சேவ் த பேர்ள்ஸ் அமைப்பு  மறுபெயர் சேவ் த பேர்ள் சங்கம்


11. சுப்பர் முஸ்லிம் அமைப்பு

No comments