கிரிமியா பாலம் குண்டு வெடிப்பு: 8 சந்தேக நபர்களை கைது செய்தது ரஷ்யா!


கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தின் மீது கடந்த சனிக்கிழமையன்று நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் எட்டு பேரை கைது செய்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு சேவைகள் (FSB) இன்று புதன்கிழமை தெரிவித்தன.

கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து ரஷ்யர்கள் மற்றும் மூன்று உக்ரேனியர்கள் மற்றும் ஆர்மேனியர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறியது.

22,770 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் ஃபிலிம் ரோல்களின் 22 தட்டுகளில் இந்த வெடிபொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு சேவைகள் தெரிவித்துள்ளது.

இந்த வெடிபொருட்கள் ஆகஸ்ட் தொடக்கத்தில் உக்ரைனில் உள்ள ஒடெசா துறைமுகத்தில் இருந்து பல்கேரியாவில் உள்ள ரூஸ் துறைமுகத்திற்கு கப்பல் மூலம் அனுப்பப்பட்டதாக பாதுகாப்பு நிறுவனம் கூறுகிறது. 

பின்னர் அவர்கள் ஜோர்ஜியாவில் உள்ள போட்டி துறைமுகத்தை கடந்து ரஷ்யாவிற்கு சாலை வழியாக வருவதற்கு முன்பு ஆர்மீனியாவிற்கு அனுப்பப்பட்டது.

வெடிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அக்டோபர் 6 ஆம் திகதி கிரிமியாவின் எல்லையான க்ராஸ்னோடார் என்ற ரஷ்ய பிராந்தியத்தை அடைவதற்கு முன்பு, ஜோர்ஜியாவில் பதிவுசெய்யப்பட்ட ஒரு பாரவூர்த்தியில் வெடிக்கும் சாதனம் அக்டோபர் 4 ஆம் திகதி ரஷ்யாவிற்குள் நுழைந்ததாக ரஷ்ய சேவைகள் கூறுகின்றன.

இந்த பயங்கரவாத தாக்குததலை உக்ரேனிய இராணுவ புனலாய்வுத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டது என்று ரஷ்யாவின் பாதுகாப்பு சேவைகள் கூறுகிறது. 

உக்ரைனின் தலைநகர் கியேவில் உள்ள ஒரு முகவர் வெடிபொருட்களின் போக்குவரத்தை ஒருங்கிணைத்ததாகவும், பல்வேறு இடைத்தரகர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும் கூறுகிறது.

மற்ற நிபுணர்கள், வெடிப்பு பாலத்தின் கீழே இருந்து வந்ததாகவும், பாலத்தின் மீது பாரவூர்தி வெடிகுண்டு வெடித்ததால் ஏற்படவில்லை என்றும் ஊகித்துள்ளனர்.

பாலத்தின் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக, ரஷ்யா திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் உக்ரைன் முழுவதும் பாரியளவில் 70 மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.

No comments