லஞ்சம்:வியாழேந்திரன் சகோதரர் கைது!காணியொன்றை வழங்குவதில் லஞ்சம் பெற முற்பட்ட அரச பணியாளர் மற்றும் அவரிற்கு பின்னாலிருந்த அரசியல் பிரமுகர் ஒருவர்  என இருவர் கைதாகியுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் சகோதரர், காணி விவகாரம் ஒன்று தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் நேற்று அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காணி ஒன்று தொடர்பில் 15 லட்சம் ரூபாவை லஞ்சமாக பெற முயற்சித்த குற்றச்சாட்டில், மட்டக்களப்பில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது உத்தியோகத்தர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

No comments