ஆப்கானிஸ்தானில் பயங்கரம்: நிலநடுக்கத்தில் 1000 பேர் பலி!


ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 600 பேருக்கு மேற்பட்டர்கள் காயமடைந்துள்ளனர் என்று நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் அயல் நாடான பாகிஸ்தானின் தொலைதூர பகுதிகளில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் வீடுகள் இடிந்து விழுந்ததைக் காட்டியது.ஆப்கானிஸ்தான் தலைநகர் வரையிலான மக்கள் இந்த அதிர்வுகளை உணரப்பட்டது.

இப்பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதிகாரிகள் உலங்கு வானூர்த்திகளைக் கொண்டு வந்து, இடிபாடுகளில் இருந்து மக்களை மீட்க உதவி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். 

பாகிஸ்தானில் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்பு குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை.

No comments