3ஆம் போர் தொடங்கினால் பிரித்தானியா அழிந்துவிடும் - முன்னாள் ரஷ்ய ஜெனரல்


மூன்றாம் உலகப் போர் ஏற்பட்டால் பிரித்தானியா முழுமையாக அழிக்கப்படுவது உறுதி என்று ரஷ்யாவின் ஓய்வு பெற்ற இராணுவ ஜெனரல் ஈவ்ஜெனி புஷ்கின்ஸ்கை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானியாவின் புதிய இராணுவ தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள சர் பேட்ரிக் சாண்டர்ஸ், 3ஆம் உலகப் போரில் ரஷ்யாவைத் தோற்கடிக்க வேண்டும் என்று படை வீரர்களுக்கு அறைகூவல் விடுத்திருந்தார்.

இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள ரஷிய அதிபர் புதினின் ஆதரவாளரும் ஓய்வு பெற்ற ராணுவ தளபதியுமான ஈவ்ஜெனி தெரவிக்கையில் :

மூன்றாம் உலகப்போரின் விளைவாக பிரித்தானியா காணாமல் போய்விடும் என்பது சாண்டர்சுக்கு புரியவில்லை என்று கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த நாடும் அழிந்து விடும் நிலையில், அவரும் அவரது சந்ததியும் எங்கே போய் வாழ்வார்கள் என்பது எங்களுக்கே தெரியாது என்றும் அவர் கேலி செய்து குறிப்பிட்டுள்ளார்.

லினின்கிராட் லிதுவேனியாவிற்கும் போலந்துக்கும் இடையில் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் இது ரஷ்யாவின் பால்டிக் கடற்படையின் தலைமையகமாகவும் உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத் தடைகள் காரணமாக ரஷ்யாவிலிருந்து சில பொருட்களின் போக்குவரத்து ஜூன் 18 முதல் மட்டுப்படுத்தப்பட்டதாக கலினின்கிராட் ரெயில்வேக்கு லிதுவேனியா தெரிவித்திருந்தது. 

இதனை கண்டித்த கலினின்கிராட் கவர்னர் அன்டன் அலிகானோவ் கூறுகையில், 

இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும், ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும்போது அந்த நாடு செய்த ஒப்பந்தங்களை மீறுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இப்போது நேட்டோவில் உள்ள லித்துவேனியா வழியாக ரஷ்ய பொருட்களை கொண்டு செல்லத் தடை விதித்திருப்பதன் மூலம், மேற்கத்திய நாடுகள் ஒரு ஆபத்தான விளையாட்டை கையிலெடுத்துள்ளன. இந்த விவகாரத்தில், கலினின்கிராட் பகுதிக்கு அணு ஆயுதங்களை அனுப்புவதன் மூலம் உடனடியாக பதில் நடவடிக்கை எடுக்குமாறு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை வலியுறுத்துகிறேன்.

மேலும், லிதுவேனியாவின் 1991ம் ஆண்டு அங்கீகாரத்தை நிராகரிக்க வேண்டும், லிதுவேனியா தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தத்தை அதிபர் புதின் நிராகரிக்க வேண்டும். நாம் அணு ஆயுதங்களை கலினின்கிராட் வரை கொண்டு செல்ல வேண்டும். நீங்கள்(அமெரிக்கா) நெருப்புடன் விளையாடுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும் என்று ஆவேசத்துடன் பேசினார்.

No comments