எரிபொருள் விநியோகத்தில் இராணுவம் வேண்டாம்!



எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் இருந்து இராணுவத்தை முற்றாக விலக்கிக் கொளளவேண்டுமென தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்றைய சூழ்நிலையில் தினமும் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்து நிற்கும் பொது மக்களிற்கு, எரிபொருள் விநியோகத்திலும் அநாவசியமாக மேலதிக துன்பங்கள் ஏற்படுவது தடுக்கப்பட்ட வேண்டுமெனவும் அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் இருந்து இராணுவத்தை முற்றாக விலக்கிக் கொள்வதன் மூலமே அதனை உறுதிப்படுத்த முடியும்.

நடவடிக்கைகளில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டும் பொறுப்பு காவல்; துறைக்கே உரியது. இதில் இராணுவத் தலையீடு தேவையற்றதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments