ஹிருணிகா :கட்டிப்பிடி வைத்தியம்!தடாலடி போராட்டங்கள் மூலம் எதிரணியை சிதறடிப்பதில் பிரபல்யமானவர் ஹிருணிகா பிரேமசந்திர.

யாழ்ப்பாணத்தில் அரச எடுபிடி அருண் சித்தார்த்தை ஓட ஓட விரட்டியவர் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கொழும்பில் உள்ள தனியார் இல்லத்துக்கு முன்பாக, ஐக்கிய மக்கள் சக்தியினர் போராட்டத்தில் தனது கட்டிப்பிடி வைத்தியம் மூலம் அரச விசுவாச காவல்துறையை கலங்கடித்துள்ளார்.

போராட்டத்தில் பங்கேற்றிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான ஹிருணிகா பிரேமசந்திர, கடமையில் இருக்கும் பொலிஸாரை கட்டியணைத்து தனது கட்டிப்பிடி வைத்தியத்தை செய்து திணறடித்துள்ளார்.

No comments