போலத்தில் நிலைநிறத்தப்பட்டது ஏவுகணை தடுப்பு!!


உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள போலந்து விமான நிலையத்தில் அமெரிக்க ஏவுகணை தடுப்பு சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் Rzeszow பகுதியில் உள்ள போலந்து இராணுவ தளத்தில் அமெரிக்க விமானப்படையின் Blackhawk ரக உலங்கு வானூர்திகளும் மற்றும் பிற இராணுவ வாகனங்களும் தரையிறக்கப்பட்டுள்ளன. நேட்டோவின் கிழக்குப்பகுதியை வலுப்படுத்தும் விதமாக அமெரிக்க வீரர்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். 

உக்ரைன் எல்லையில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இராணுவ தளத்தில் வான் பரப்பில் இருந்து தாக்கும் பேட்ரியாட் ரக ஏவுகணைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் பதட்டம் முன்பை விட அதிகரித்துள்ளது.

No comments