சிங்கள ஊடகவியலாளருக்கு கொலை மிரட்டல்!இலங்கை காவல்துறையின்  சிரேஸ்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் பலரின் ஊழல்களை அம்பலப்படுத்தி கட்டுரையொன்றை எழுதிய  பத்திரிகைகளின் ஆசிரியருக்கு கொலைமிரட்டல் விடுத்தமை புறக்கணிக்க முடியாத மிகப் பாரதூரமான விடயம் எனச்சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

2022 மார்ச் 15ஆம் திகதி அருண பத்திரிகையில் 'திடீரெனப் பணக்கார்களாக மாறும்  காவல்துறையினர்' என்ற தலைப்பில் கட்டுரை பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

ஊழல்களை அம்பலப்படுத்திய ஊடகவியலாளரான சமிந்தவை மூன்று வாரங்களுக்குள் கொன்றுவிடுவோம் என மறைமுகமாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


No comments