சோறு இயலாது:றொட்டியே தஞ்சம்!



சோற்றுபார்சல் விலை ஏற்றத்தையடுத்து  பரோட்டா மற்றும் வடை ஆகியவற்றின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது அதிகளவில் சிற்றுண்டிகள் விற்பனை செய்யப்படுவதாக  சங்கத்தின் தலைவரான அசேல சம்பத் தெரிவித்தார்.

ஒரு போத்தல் தேங்காய் எண்ணெய் தற்போது ரூ.900 ஆகவும், ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.950-1,000 ஆகவும் உள்ளது. முட்டை விலை ரூ.33, பருப்பு கிலோ ரூ.400, சீனி ரூ.200 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

உணவுகளைத் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் விலைகள் 500% அதிகரித்து உற்பத்திச் செலவை அதிகரித்துள்ளன.

உணவுப் பொருட்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாதது எனவும் அவர் தெரிவித்தார்.

கோழி இறைச்சி உணவுப் பொதியின் விலை ரூ.300 ஆகவும், மீன் சாப்பாடு ரூ.240 ஆகவும், முட்டை சாப்பாடு ரூ.220 ஆகவும், மரக்கறி உணவு ரூ.200 ஆகவும் உயர்ந்துள்ளன.

உணவுப் பொதியின் விலை உயர்வால் பொதுமக்கள் 50 முதல் 150 ரூபாவுக்கு பரோட்டா மற்றும் வடை போன்ற மலிவான மாற்றுகளுக்கு மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


No comments