சம்பந்தனின் அடியில் கோத்தா மயங்கினார்!
கோத்தபாயவுடனான தமிழரசு மற்றும் தமிழீழ விடுதலைக்கழக இன்றைய சந்திப்பில் போது இரா.சம்பந்தர் மேசையில் அடித்ததில் கோத்தபாய மயங்கிபோனார் என்ற பாணி கதைகள் வேகமாக பரவவிடப்பட்டுள்ளது.
பங்காளிகளுள் ஒருதரப்பான டெலோவும் வெளியே முன்னணியும் சந்திப்பை துரோகிகள் பாணியில் வெளியே குத்திவிட சந்திப்பு முடிந்து வெளியே வந்த தரப்பு அவசர அவசரமாக தமது ஊடகங்கள் ஊடாக சம்பந்தர் அறைந்தார் கோத்தபாய பயந்தார் பாணியில் படக்கதைகளை அவிழ்த்துவிட்டுள்ளன.
13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான அதிகாரப் பரவலாக்கம் பற்றியே பேசத்தயாராக இல்லாத நிலையில் எங்களிற்கும் கஸ்டம் உங்களிற்கும் கஸ்டமென கதைகள் மடக்கப்பட்டுள்ளன.
இதனிடையே தமிழரசு மற்றும் தமிழீழ விடுதலைக்கழக கோல்மால்களை பற்றி தெரிந்திருந்த அரசியல் கைதிகளிற்காக போராடும் குரலற்றவர்களின் குரல் அமைப்பு நேற்றைய தினம் அவர்களை சந்தித்தபோது தமது கோரிக்கைகளை பட்டியலிட்டு எழுத்துமூலம் வழங்கியதுடன் அதனை ஊடகங்களிற்கும் முன்கூட்டியே வழங்கியிருந்தது.
இந்நிலையில் அவர்களால் வழங்கப்பட்ட பட்டியல்களை முகவர்களாக கையளித்த தமிழரசு மற்றும் தமிழீழ விடுதலைக்கழக கூட்டு அதனையும் தனது சாதனையாக்கியுள்ளது.
வுழமை போலலே தமிழரசு மற்றும் தமிழீழ விடுதலைக்கழக கட்சி ஊடகங்கள் அடித்தார்,இடித்துரைத்தார் என வார்த்தை ஜாலங்களை அள்ளிவீச தொடங்கியுள்னன.
Post a Comment