உக்ரைன் தலைநகரை விட்டு பொதுமக்கள் சுதந்திரமாக வெளியேறலாம் - ரஷ்ய இராணுவம்

உக்ரைனில் வான்வழித் தாக்குதல் நடத்துவதில் ரஷ்யா வலிமையாக உள்ளதாகவும், கீவ் நகரைவிட்டுப் பொதுமக்கள் சுதந்திரமாக வெளியேறலாம் என்றும் ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது.

உக்ரைனில் பல இடங்களில் ரஷ்யப் படையினரை எதிர்த்து உக்ரைன் ராணுவத்தினர் போரிட்டு வருகின்றனர். ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் வேகம் குறைந்துள்ளதாக உக்ரைன் ராணுவமும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வான்வழித் தாக்குதலில் தாங்கள் வலிமையாக உள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

கீவ் நகரில் உள்ள பொதுமக்கள் சுதந்திரமாக நகரைவிட்டு வெளியேறலாம் என்றும், கீவ் - வாசில்கிவ் நெடுஞ்சாலை வழியாக வெளியேறுவது பாதுகாப்பானது என்றும் ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது. 

பொதுமக்களை வெளியேறச் சொல்வதும் கீவ் நகரின் மீது ரஷ்ய இராணுவம் மீண்டும் மிகப்பெரும் அளவில் விமானங்கள், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதைக் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

No comments