சிவராத்திரிக்கு மூன்று மணிநேர மின்வெட்டு! நாளை (01) காலை 8.30 மணி  முதல் மாலை 5.30 மணி  வரையான காலப்பகுதியில் மூன்று மணி நேரம் மின்சாரம் தடைப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

அதன்படி, அனைத்துப் பிரிவுகளிலும் (ஏ - டபிள்யூ) மூன்று மணி நேரம் மின்தடை ஏற்படும்.

இரவு நேர மின் தடை விதிக்கப்படாது எனவும், மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க கேட்டுக்கொண்டார்.

தேவைப்பட்டால், 30 நிமிட திட்டமிடப்படாத மின்வெட்டு நடைபெறலாம் என்றார்.

No comments