2ஆம் நாள் உக்ரைன் யுத்தம்!! எங்களைத் தனிமையில் விட்டுவிட்டுனர்!!


2ஆம் நாள் யுத்தம்

உக்ரைன் மீதான இரண்டாம் நாள் படையெடுப்பை ரஷ்யப் படைகள் முன்னெடுத்துவருகின்றன. இரவு முழுவதும் ஊடரங்கு அமுலில் இருந்தது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஐரோப்பாவில் நடைபெறும் மிகப் பொிய தரைப்போர் இதுவாகும்.

கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கில் உள்ள உக்ரேனிய நகரங்கள் மீதான முன்னேற்றத்திற்குப் பிறகு, ரஷ்யா உக்ரேனிய தலைநகர் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துகிறது. நாடு முழுவதும் போர் நடைபெறுகிறது. 

தலைநகர் கீய்விற்கு மக்கள் செறிந்து வாழும் பகுதியான போஸ்னியாகேவில் இரவு இரவாக வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அங்கு அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிடத்தில் பல பகுதிகள் தீம்பிழம்புகளுடன்  எரிந்தது.

குறைந்தது 8 பேர் காயமடைந்தனர்.

பெரும் சத்தங்களுடன் தலைநகரில் வெடியோசைகள் செவிமடுக்கப்படுகின்றன.

தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

உக்ரைனில் இராணுவத்தினைரை மட்டுமே குறிவைப்பதாகவும் பொதுமக்கள் பயப்படவேண்டிய அவசியம் இல்லை என ரஷ்யா வாக்குறுதி அளித்துள்ளது.

தலைநகர் கிய்வில் 2.8 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். மக்கள் பதுக்கு குழிகளுக்கும் குறிப்பாக நிலக்கீழ் அறைகள் மற்றும் நிலக்கீழ்  தொடருந்து நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

நேற்றைய முதல் நாள் சண்டையில் இராணுவத்தினர் உட்பட 137 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்ய போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது

இன்று ரஷ்யாவின் போர் விமானம் ஒன்று இன் தலைநகரில் சுட்டு வீழ்த்தப்பட்டது . அந்த விமானம் பொதுமக்கள் பகுதியில் விழுந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

எங்களைத் தனிமையில் விட்டுவிட்டுனர்!!

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இன்று காலை தனது உரையில் நாட்டு மக்களுக்கு ஆற்யி உரையில் உக்ரைனை மேற்கு நாடுகள் தனிமையில் விட்டுவிட்டனர் என கவலையை வெளிப்படுத்தினார். மேற்கத்திய பொருளாதாரத் தடைகளின் சக்தியை அவர் கேள்வி எழுப்பினார். உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகள் தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றன குற்றம் சாட்டினார்.


கருங்கடல் தீவை கைப்பற்றியதாக ரஷ்யா உரிமை கோருகிறது

உக்ரைனின் தலைநகர் கீய்வின் புறநகர் பகுதிகளில் கடுமையான தாக்குதல்களை ரஷ்யப் படைகள் முன்னெடுத்துள்ளனர். பல்குழல் ஏறிகணைத் தாக்குல்கள், டாக்கித் தாக்குல்கள், ஆட்டிலறி தாக்குதல்கள், கவசம்தாங்கிப் படைகளில் தாக்குல்கள் என குண்டு மழை பொழிவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

தலைநகர் கீய்வ்வை நோக்கி ரஷ்யப் படைகள் முன்னேறுவதாக அமெரிக்கா கூறுகிறது.

ஒடேசாவுக்கு தெற்கே கருங்கடல் தீவை கைப்பற்றியதாக ரஷ்யா உரிமை கோருகிறது

கருங்கடலில் உள்ள சிமீன்சி (Zmiinyi) தீவை தங்கள் படைகள் கைப்பற்றியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.

அங்கு நிலைகொண்டிருந்த 82 உக்ரைன் வீரர்கள் ரஷ்யப் படைகளிடம் சரணடைந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒடேசா துறைமுக நகருக்கு தெற்கே உள்ள தீவில் நிறுத்தப்பட்டிருந்த 13 எல்லைப் பாதுகாப்புப் படையினர் ரஷ்ய போர்க்கப்பலின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கில் செர்னோபில் அணுசக்தி தளம் ரஷ்யப் படைகளிடம் வீழ்ந்தது. அங்கு உக்ரைன் படையினர் பிணைக் கைதிகளாக அடைக்கப்பட்டிருப்பதாக அமெரிக்கா கூறுகிறது.

No comments