உதவுங்கள்! ரஷ்யாவை மேசைக்கு அழையுங்கள்! போர் எதிர்ப்புக் கூட்டணி தேவை!


போர் எதிர்ப்புக் கூட்டணிக்கு உக்ரைன் அதிபர் விளாடிமீர் ஜெலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேட்டோவின் கிழக்கு ஐரோப்பிய உறுப்பினர்களிடம் இருந்து பாதுகாப்பு உதவியை பெறுவதற்கும், ரஷ்யாவை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவருவதற்கும் உதவுமாறே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இதுகுறித்து போலத்து பிரதிநிதி அன்டர்சிஜ் டுடாவுடன் (Andrzej Duda) பேசியதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் எங்களுக்கு போர் எதிர்ப்பு கூட்டணி தேவை என்று உக்ரேனிய ஜனாதிபதி ட்வீட் செய்துள்ளார்.

முன்னதாக தனது நாட்டிற்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்பு தொடர்கிறது. ரஷ்யா மீது மேற்கு நாடுகளால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் போதுமானதாக இல்லை என்பதற்கு இது சான்றாகும் என்று ஜெலென்ஸ்கி கூறுகிறார்.

உக்ரைனில் என்ன நடக்கிறது என்பதை உலகம் தொலைதூரத்தில் இருந்து தொடர்ந்து கவனித்து வருவதாக உக்ரைன் அதிபர் கவலையை வெளியிட்டார்.

அதிகாலை 4 மணி முதல் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்களை மீண்டும் தொடங்கியதாகவும் ரஷ்யப் படைகளின் முன்னேறுவதை பல பகுதிகளில் நிறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ரஷ்ய தாக்குதல்கள் இராணுவ மற்றும் சிவிலியன் இலக்குகளை இலக்காகக் கொண்டதாக கூறினார்.

No comments