திருமணமாகாத தம்பதியினர் உடலுறவு மற்றும் மது அருந்தியமைக்காக 140 முறை பிரம்படி


இந்தோனேசியாவில் திருமணமாகாத தம்பதியினர் வெளியே உடலுறவு கொண்டதற்காகவும், மது அருந்தியதற்காகவும் 140 முறை பிரம்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இச்செயல் ஷரியா அல்லது இஸ்லாமிய மதச் சட்டத்தை மீறுகிறது.

அச்சே மாகாணத்தில் நடந்த பொது இடங்களில் பிரம்படி தண்டனையாக பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். 

பிரம்படியைத் தொடர்ந்து 21 வயது பெண் மயக்கமடைந்தார். மூன்று பெண் அதிகாரிகள் மாறி மாறி பிரம்புக் குச்சியால் அவளைத் தாக்கினர். அதே நேரத்தில் அவள் அழுதாள். அவள் சரிந்த விழுந்த நிலையில், பெண் அதிகாரிகள் அவளை மேடையில் இருந்து நோயாளர் காவு வண்டியில் கொண்டு சென்றனர்.

இன்று வியாழக்கிழமை அந்தத் தம்பதியினருடன் இஸ்லாமிய காவல் படையைச் சேர்ந்த ஒரு அதிகாரி உட்பட நான்கு பேர் மீதும் பிரம்படி நடத்தப்பட்டது. அவர்கள் அனைவரும் ஷரியாவை மீறியதாகக் கண்டறியப்பட்டனர்.

மத ரீதியாகப் பழமைவாத ஆச்சேயில் இஸ்லாமிய சட்டத்தை மீறுவதற்கு பிரம்படி ஒரு பொதுவான தண்டனையாகும். இருப்பினும் இந்த நடைமுறை நீண்ட காலமாக இது கொடூரமானது என்று கூறும் உரிமைக் குழுக்களிடமிருந்து விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

ஆச்சே மாகாணத்தின் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தின் கீழ், திருமணத்திற்கு வெளியே உடலுறவு கொண்டால் 100 பிரம்படி தண்டனை விதிக்கப்படும். அதே சமயம் மது அருந்தினால் 40 பிரம்படி தண்டனை விதிக்கப்படும்.

பிரம்படிகள் முறையாகக் கட்டுப்படுத்தப்படவில்லை என்று இந்தோனேசிய உரிமைகள் குழுவான கோன்ட்ராஸின் ஆச்சே ஒருங்கிணைப்பாளர் அசாருல் ஹுஸ்னா கூறுகிறார். பிரம்படி விதிக்கப்பட்ட பின்னர் மக்களை ஆதரிக்க இதுபோன்ற தண்டனைகளைச் சுற்றியுள்ள விதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.


இஸ்லாமிய காவல் படையைச் சேர்ந்த அதிகாரி, அவரது  துணைவியார், ஒரு தனியார் இடத்தில் நெருக்கமாக இருந்ததற்காக 23 முறை பிரம்படி தண்டனை விதிக்கப்பட்டார்.

அவர் அவளுடன் அவளது வீட்டில் தனியாகப் பிடிபட்டார் என்று ஆச்சேவின் இஸ்லாமிய காவல் படைத் தலைவர் முகமது ரிசால்  கூறினார். அந்த அதிகாரி பணிநீக்கம் செய்யப்படுவார் என்றும் கூறினார்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தோனேசியாவில் ஷரியாவை அமல்படுத்தும் ஒரே மாகாணம் ஆச்சே ஆகும். மேலும் பல குற்றங்களுக்கு பொது இடங்களில் பிரம்படி தண்டனை விதிக்கப்படுகிறது.

No comments