படியேறினார் கோத்தா?

 


இன்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாக்குமூலமளித்துள்ளார்.

விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டிருந்த அவர் அங்கு  சுமார் இரண்டரை மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையாகியமை கவனத்தை ஈர்த்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பணியாற்றியபோது, கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட வீட்டு திட்டங்களில் தனது ஆதரவாளர்களிற்கு பரிந்துரைக் கடிதங்களை வழங்கியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் காணாமல் போயிருந்த லலித் குகன் உள்ளிட்ட இரு  செயற்பாட்டளர்கள் தொடர்பிலும் கோத்தபாய விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார்.


No comments