பழைய பூங்கா:சாத்தியப்படவில்லை!
யாழ் பழைய பூங்கா வளாகத்தினுள் உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கு அனுமதியளித்து மாவட்ட நீதிமன்றத்தினால் முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்பை மீறி யாழ் மேல் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
மனு மீதான இறுதித் தீர்ப்பு வரும் வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இடைக்காலத் தடை விவகாரம் முடிவடையும் வரை எந்தவித கட்டுமானப் பணிகளும் நடைபெறாது என உறுதி மொழி கோரப்பட்ட போது, அரசு வழக்கறிஞர்கள் விவகாரம் குறித்து முடிவெடுக்க மேலும் கால அவகாசம் கோரியிருந்தனர்.
பழைய பூங்கா வளாகத்தில் 170 மில்லியன் ரூபா நிதியுதவியில் உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக கடந்த டிசம்பரில் யாழ்ப்பாண நீதிமன்று இடைக்கால உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
பின்னர் நீதிமன்ற தடை உத்தரவை விலக்கி வளாகத்திற்குள் கட்டுமானத்தை தொடங்க அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தீர்ப்பை எதிர்த்து மனுதாரர்கள் சார்பில் மேல்நீதிமன்றில்சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆட்சேபனை மீதான விசாரணை எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

Post a Comment