ஆப்பிழுத்த குரங்கு கதை : உதய கம்மன் பில உள்ளே!
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஸ் சாலேயை காப்பாற்றி கோத்தபாயவை காப்பாற்ற முற்பட்ட மகிந்த குடும்ப முன்னாள் நண்பர்கள் கைது அச்சத்திலுள்ளனர்.
சுரேஸ் சாலே கைது செய்யப்பட்டமை குறித்து முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக நீதிமன்றத்தை அவமதித்ததாகவும், மதங்களுக்கு இடையிலான பதற்றத்தைத் தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டதாகவும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கில், முன்னாள் அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு பேர், கடந்த காலங்களில் ஊடக மாநாடுகளில் வெளியிட்ட கருத்துகள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருந்ததாக அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஊடக மாநாடுகளின் திருத்தப்படாத காணொளிக் காட்சிகளை ஊடக நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உதய கம்மன்பில வெளியிட்ட கருத்துகள் பௌத்த மற்றும் கத்தோலிக்க மதங்களுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை என்றும், சாட்சிகளுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதையடுத்து, விடயம் தொடர்பில் உடனடியாக முறைப்பாடு பதிவு செய்து, விரைவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Post a Comment