கோட்டபாய புண்ணியம்:மகிந்த தேசப்பிரியவுக்கு விசாரணை!



2019 ஜனாதிபதி தேர்தலின் போது, அமெரிக்க பிரஜையான கோட்டாபய ராஜபக்சவை சட்ட விரோதமாகப் போட்டியிட அனுமதித்ததாகக் கூறி,   முன்னாள் அமைச்சர் அலி சப்ரி மற்றும் தேர்தல்கள் ஆணைக் குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஆகியோருக்கு எதிராக ' இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்' முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால், கோட்டாபய ராஜபக்சஷ  தனது அமெரிக்கக் குடியுரிமையை முறையாகத் துறக்காமலேயே தேர்தலில் போட்டியிட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராக இருந்த மஹிந்த தேசப்பிரியவும்,  கோட்டாபயவின் வழக்கறிஞராக இருந்த அலி சப்ரியும் இணைந்து தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி மோசடிக்குத் துணை போயுள்ளனர் .

தேர்தலின் போது கோட்டாபய எவ்வித முறையான ஆவணங்களையும் சமர்ப்பிக்கவில்லை என அன்றைய தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர்  ரத்னஜீவன் {ஹல் இரண்டு சத்தியக் கடதாசிகளை ஆதாரமாக வழங்கியுள்ளார்.

அலி சப்ரி வழங்கிய ஒரு சத்தியக்கடதாசியை மட்டும் வைத்துக் கொண்டு, எந்தச் சோதனையும் இன்றி கோட்டாபயவின் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தகவல்படி, கோட்டாபயவின் குடியுரிமை 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தான் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

அப்படி என்றால் 2019 தேர்தலில் அவர் ஒரு அமெரிக்கப் பிரஜையாகவே இருந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

இதனிடையே மகிந்த தேசப்பிரியவின் விசேட தேவையுடைய மகனிற்கான மருத்துவ உதவிகளை மகிந்த குடும்பம் வழங்கியதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளது.


No comments