தப்பிப்பிழைக்கும் அருச்சுனா கதிரை!



சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் அர்ச்சுனா இராமநாதனின் நாடாளுமன்ற கதிரையை தக்கவைப்பதற்கான காலம் மீண்டும் நீடித்துள்ளது.

அஆவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தொடரத் தகுதியுடையவரா என்பதை சவால் செய்யும் மனு தொடர்பான வாதங்களை விசாரிக்க 2026 ஒகஸ்ட் 31 ஆம் திகதியை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

;வழக்கு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதிலும், நீதியரசர்கள் அமர்வு முறையாக அமைக்கப்படாத காரணத்தால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

மனுவை சிங்கள கட்சியான பெரமுன கட்சியின் தலைவர் தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், நடைபெற்ற பொதுத் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்த போது, அர்ச்சுனா இராமநாதன் இன்னும் அரசாங்க மருத்துவ அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசுப் பணியிலிருந்து முறையாக பதவி விலகல் செய்யாமல் வேட்புமனு தாக்கல் செய்தது நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தை மீறுவதாக மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி அர்ச்சுனா இராமநாதன் சட்டபூர்வமாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

இதனிடையே அண்மையில் நாடாளுமன்ற அமர்வில் தனது பதவி வெறிதாகவுள்ளதை அர்ச்சுனா இராமநாதன் ஒப்புக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


No comments