கறுப்புக்கொடி விவகாரம்:மாணவர்கள் இலக்கு!



 இலங்கையின் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக, யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர்கள் உள்ளிட்ட மூவருக்கு இலங்கை காவல்துறையின் குற்றத் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் உள்ளிட்ட மூன்று மாணவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கடிதம் மார்ச் 13ஆம் திகதியிடப்பட்டு, மார்ச் 16ஆம் திகதி காலை விசாரணைக்கு வருமாறு கோரப்பட்டிருந்தது. இருப்பினும், பல்கலைக்கழகப் பதிவாளர் கடிதத்தை மார்ச் 17ஆம் திகதியான இன்றேர மாணவர்களிடம் கையளித்துள்ளார். 

முன்னதாக   துணைவேந்தர் மற்றும் பதிவாளரிடம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்த பணிப்புரையின் பேரில், பல்கலைக்கழக மட்டத்தில் முதற்கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டன.

 கறுப்புக் கொடியேற்றிய சம்பவத்துடன் தொடர்புடையதாக 2 மாணவிகள் உள்ளிட்ட 30 மாணவர்கள் ஏற்கனவே பல்கலைக்கழக மட்ட விசாரணையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


No comments