நாளை முற்றுகைப்போராட்டமாம்!இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நாளைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கைது செய்ய வேண்டும். அவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யக்கூடாதென சம்மேளன தலைவர் அன்னராசா தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் பேரணியாக புறப்பட்டு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தை முற்றுகையிடுவதற்கு நாம் தயாராகவுள்ளோம்.

நாளை காலை 9 மணிமுதல் தீர்வு கிடைக்கும் வரை யாழ் மாவட்ட செயலகம் முன் முற்றுகைப் போராட்டத்தை நடாத்துவதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்.

எமது போராட்டத்தை  இந்தியாவுக்கு எதிரானதோ தமிழ்நாட்டிற்கு எதிரானதோ எனக்கூறி போராட்டத்தையும் எங்களையும் கொச்சைப்படுத்த வேண்டாம் எனவும் அன்னராசா அழைப்புவிடுத்துள்ளார்.


No comments