திருப்பதியில் 4கோடி:மகிந்த பிரசன்னம்!பிரதமர் மஹிந்த ராஜபக்ச மன அமைதி வேண்டி இரண்டு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு திருப்பதிக்கு சென்றுள்ளார்.

இன்றுக்காலை நாட்டைவிட்டு அவர், புறப்பட்டுச் சென்றுவிட்டார் என்றும் தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டே அவர் சென்றுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச, திருப்பதியில் இரண்டு நாட்கள் தங்கியிருப்பார். அத்துடன் திருப்பதியில் வழிபாடுகளில் ஈடுபடுவார் என இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனிடையே திருப்பதியில் வெள்ளிக்கிழமைகளில் ஒரு நாள் விசேட வழிபாட்டில் ஈடுபட கட்டணமாக இலங்கை பணமாக 4கோடி செலுத்தவேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments