செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையைச் சோதித்து ரஷ்யா! கண்டனம் வெளியிட்டது அமெரிக்கா


ரஷ்யா செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையைச் சோதித்தமைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற  சோதனை என்று அமெரிக்கா கண்டித்துள்ளது.

ரஷ்யாவின் தனது சொந்த செயற்கைக்கோள்களில் ஒன்று மீது எதிர்ப்பு ஏவுகணையைப் பயன்படுத்தி  வெடிக்கச் செய்தது, 

இச்சோதனை விண்வெளியில் குப்பைகளை உருவாக்கியது, அத்துடன்  சர்வதேச விண்வெளியில் நிலையத்தில் விண்வெளி வீரர்கள் காப்ஸ்யூல்களில் தங்கவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

விண்வெளி நிலையத்தில் தற்போது ஏழு பணியாளர்கள் உள்ளனர் - நான்கு அமெரிக்கர்கள், ஒரு ஜெர்மன் மற்றும் இரண்டு ரஷ்யர்கள்.

விண்வெளி நிலையம் சுமார் 420 கிமீ (260 மைல்) உயரத்தில் சுற்றுகிறது.

இத்தாக்குதல் சோதனை இதுவரை 1,500 க்கும் மேற்பட்ட கண்காணிக்கக்கூடிய சுற்றுப்பாதை குப்பைகள் மற்றும் நூறாயிரக்கணக்கான சிறிய சுற்றுப்பாதை குப்பைகளை உருவாக்கியுள்ளது, அவை இப்போது அனைத்து நாடுகளின் நலன்களையும் அச்சுறுத்துகின்றன என அமெரிக்கா கூறுகிறது.

காஸ்மோஸ்-1408 என்ற  ரஷ்ய செயற்கைக்கோள் மீதே ஏவுகணை ஏவப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

1982 இல் விண்ணுக்கு ரஷ்யாவால் ஏவப்பட்ட ஒரு உளவு செயற்கைக்கோள் தான காஸ்மோஸ் -1408. ஒரு டன் எடையைக் கொண்டிருந்தது மற்றும் பல ஆண்டுகளுக்கு முன்பே செயலிழந்திருந்தது. 

எங்கள் கூட்டாளிகள் மற்றும் நட்பு நாடுகளுடன் இணைந்து ரஷ்யாவின் பொறுப்பற்ற செயலுக்கு பதிலளிக்கும் என்று அமெரிக்கா தனது கண்டனத்தில் தெரிவித்துள்ளது.

No comments