கவிதைக்காக சிறை!கவிதையெழுதியமைக்காக கைதாகி சிறையிலுள்ள கவிஞர் அஹ்னாப் ஜஸீமிடம் குற்றப்பகிர்வுப் பத்திரம்  கையளிக்கப்பட்டது.

கவிஞர் அஹ்னாப் ஜசீமின் அடிப்படை உரிமைகள் வழக்கு கடந்த 05ம் திகதி  எடுத்துக்கொள்ளப்பட்டது இதன்போது புத்தளம் மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் ஜசீமுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும்,நவம்பர் 15 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் சட்டமா அதிபர் (AG) சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார் என்று அஹ்னாப் ஜசீமின் சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களாக குற்றச்சாட்டு பத்திரம் சமர்ப்பிக்கப்படாது தடுத்து வைக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments