கொழும்பில் கோத்தாவின் இரும்புபிடி!ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தில் பங்கேற்கும் வகையில் பல இடங்களில் இருந்து கொழும்பை நோக்கி வரும் பஸ்கள், இடைநடுவில் வைத்தே திருப்பியனுப்பப்படுகின்றன.

கொழும்புக்குச் செல்வதற்கான சரியான காரணத்தை உறுதிப்படுத்தாமையால், பஸ்கள் திருப்பியனுப்பப்படுகின்றன .

கொழும்புக்கான சகல வீதிகளிலும் ​பொலிஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள் கொழும்புக்குச் செல்வதற்கு அனுமதியளிக்கப்படுகின்றன.

நாட்டின் பல பாகங்களில் புதிய ​சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளமையை இட்டு ஐக்கிய மக்கள் சக்தி அதிருப்தி அடைந்துள்ளது.

கொழும்பில் இன்று (16) எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட விருந்த நிலையிலேயே சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு அவசரமாக, புதிதாக சோதனைச் சாவடிகள் அமைப்பதற்கான தேசிய அச்சுறுத்தல்தான் என்னவென ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.

இந்நிலையில், கொழும்புக்கு வரும் தனியார் பஸ்கள் அனைத்தும், சோதனைச் சாவடிகளில் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

அவ்வாறான சோதனைச் சாவடிகளில் பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

No comments