சீமெந்தும் விலையேற்றம்:தொழிலாளர் பாதிப்பு!இலங்கையில் ஒரு மூட்டை சீமெந்தின்  விலை 177 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய விலை ரூ.1,275 ஆகும்.

முன்னதாக சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 1098 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.

சீமெந்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை கடந்த மாதம் 8ஆம் திகதி நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்த நிலையில் தற்போது விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சீமெந்தின் விலையேற்றம் ஆயிரக்கணக்கான கட்டட வேலை தொழிலாளர்களை பாதிக்குமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
No comments