சி.வியின் கூட்டணியும் சிறீதர் திரையரங்கில் சரணாகதி!

தேசியம் பேசி புறப்பட்ட சி.வி.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியும் டக்ளஸிடம் சரணாகதி அடைந்துள்ளது.

சுp.வி.விக்கினேஸ்வரன் கட்சியை சேர்ந்தவரும் வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளராக ஈபிடிபி மற்றும் சுதந்திரக்கட்சி ஆதரவுடன்  தெரிவாகிய சபாரத்தினம் செல்வேந்திரா சிறீதர் திரையரங்கிற்கு காவடி எடுத்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பிரதேசத்தின் அபிவிருத்திக்கு மத்திய அரசாங்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளக் கூடிய ஒத்துழைப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடியதுடன் கோரிக்கை கடிதத்தினையும் கையளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் முன்னதாக வல்வெட்டித்துறை நகரசபையினில் ஆதரவளித்த ஈபிடிபி உறுப்பினர்கள் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் எதிர்க்க திட்டமிட்டுள்ளனர்.

இதனையடுத்து தனது கதிரையை காப்பாற்றவே செல்வேந்திரா சிறீதர் திரையரங்கிற்கு ஓடிச்சென்று சரணடைந்துள்ளார்.
No comments