சியரா லியோன் எரிபொருள் கொள்கலன் விபத்து! 91 பேர் பலி!!

சியரா லியோனின் தலைநகர் ஃப்ரீடவுனில் எரிபொருளை ஏற்றிவந்த கொள்கலன் வாகனம் மீது  பாரவூர்த்தி மோதியதில் ஏற்பட்ட பாரிய வெடிப்பில்

குறைந்தது 91 பேர் உயிரிழந்தனர். மேலும் 100 பேருக்கு மேல் காயமடைந்துள்ளனர்.

உள்ளூர் ஊடகங்கள் ஒளிபரப்பிய காட்சிகளில் எரிபொருள் கொள்கலன் வானத்தைச் சுற்றியுள்ள தெருக்களில் மோசமாக எரிந்த உடல்கள் கிடப்பதைக் காட்டியது.

ஜனாதிபதி ஜூலியஸ் மாடா பயோ, துயரகரமான தீவிபத்துகள் மற்றும் பயங்கரமான உயிர் இழப்புகளால் மிகவும் கவலையடைந்தேன் என ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளிக்க தனது அரசாங்கம் அனைத்தையும் செய்யும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments