ஆண்டானிற்கொரு சட்டம்:அடிமைக்கு இன்னொன்று!இலங்கையில் முககவசம் அணியாதோரை இலக்கு வைத்து வேட்டை தொடரும் நிலையில் இலங்கை அமைச்சர் சரத்வீரசேகர முகக்கவசமின்றி பங்கெடுத்த கூட்டமொன்றின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே சிராந்தியின் புகைப்படம் வெளியாகியிருந்த நிலையில் தற்போது சரத்வீரசேகர படம் வெளியாகியுள்ளது.

இதனிடையே முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட முள்ளியவளை பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள முள்ளியவளை, தண்ணீரூற்று நீராவிப்பிட்டி ஆகிய பகுதிகளில், முகக்கவசம் அணியாத  9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முள்ளியவளை பொலிஸாரும் பொதுச்சுகாதார பரிசோதகர்களும் இணைந்து மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கையின் போது, இரு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் முகக்கவசம் அணியாமல் சென்றுள்ளார்கள். இவர்களைப் பிடித்து பொலிஸாரிடம் பொது சுகாதார பரிசோதகர்கள் ஒப்படைத்தனர்.

குறித்த 9 பேரின் மீதான வழக்கு, வியாழக்கிழமை (13), முல்லைத்தீவு மாவட்டநீதவான் நீதிமன்றத்தில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக, முள்ளியளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


No comments