முடக்கமா:முடியாது கோத்தா?கொவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முழு நாட்டையும் முடக்கும் தீர்மானம் கிடையாது என தெரிவித்த கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், தேவை ஏற்படின், மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்தினை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து பொறுப்புடன் செயற்படுத்தியுள்ளது.பல நெருக்கடியான சூழ்நிலையில் பல தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

கொரோனா வைரஸ் தொற்றிலிலுந்து நாட்டை பாதுகாப்பதற்காக அனைத்து கட்சிகளின் பங்களிப்பில் அனைத்து கட்சி மாநாடொன்றை கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், கொழும்பில் இன்று(10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசீம், தலதா அத்துக்கோரள, ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரத்ன உள்ளிட்டவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.


கொரோனா தொற்று ஒரு தேசிய பிரச்சினை என்பதால், அதை ஒரு அரசியல் பிரச்சினையாக மாற்றக்கூடாது, அதனால் முழு நாடும் ஒன்று கூடி பேரழிவை எதிர்கொள்ள ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் கூறியுள்ளார்.

No comments