மாவட்ட செயலகமும் மூடப்படுமா?





யாழ்.மாவட்ட செயலக மேலதிக மாவட்ட செயலரும் அங்கயன் இராமநாதன் உள்ளிட்டவர்களது நெருங்கிய சகாவுமான பிரதீபன் கொரோனா தொற்றிற்குள்ளானதால் மாவட்ட செயலகத்தை முடக்கவேண்டியேற்படலாமென ஆலோசிப்பதாக தெரியவந்துள்ளது.

மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற பல கூட்டங்களில் பங்கெடுத்த வகையில் தொற்று பல மட்டங்களில் ஏற்பட்டிருக்கலாமென்ற அச்சம் எழுந்துள்ளது.

ஏற்கனவே  யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த நபரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் , உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து , மரண சடங்கில் கலந்து கொண்ட 30 குடும்பங்கள் அண்மையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 

யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகத்தின் கவலையீனமான  செயற்பாட்டினால் தாம் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளோம் என பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.

யாழ்ப்பாணம் சிறாம்பியடியை சேர்ந்த முதியவர் சுகவீனம் காரணமாக கடந்த 4ஆம் திகதி யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையில்  சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டார்.  அதன் போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று இனம் காணப்படவில்லை.

எனினும் மரணத்தின் பின்னர் கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்தது.

இந்நிலை மாவட்ட செயலகத்திலும் மேலதிக மாவட்ட செயலருடன் தொடர்புபட்ட பலர் மக்களுடன் நெருங்கி பணியாற்றிவருகி;றனர்.

இதனால் பொதுமக்களிடையே தொற்று நிலை ஏற்பட்டுவிடுமோவென்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.




No comments