தையிட்டி:சிங்களவர்களிற்கு உண்மை தெரியவேண்டும்!
தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை தற்போது அமைந்துள்ள காணியானது காங்கேசன்துறையிலுள்ள பொதுமக்களின் காணிகள் என நயினாதீவு நாகவிகாரையின் விகாராதிபதி நவதகல பதும தேரர் தெரிவித்துள்ளமை சர்ச்சைகளை தென்னிலங்கையில் தோற்றுவித்துள்ளது.
அந்த உண்மையினை நாட்டிலுள்ள பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“போர் காhலத்தில் சிவில் மக்களுக்கு சொந்தமான நிலங்களை கைப்பற்றி, அனுமதியின்றி கட்டப்பட்ட இடமே திஸ்ஸ விகாரை எனப்படும் போலி திஸ்ஸ விகாரையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான விடயங்களை ஆராய்ந்து நாம் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். எனவே, அந்த விடயத்தில் யாரும் கலவரமடைய வேண்டாம். தமிழ் மக்கள் இதுவரை அமைதியாகவே நான் பார்த்திருக்கிறேன்.
எனவே, அனைவரும் இணைந்து மேற்கொள்ளும் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு செய்யப்படும் அவமதிப்பாகவே நான் பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார்;
இதனிடையே திஸ்ஸ விகாரைக்கெதிரான போராட்டத்தில் தாக்கப்பட்ட தவத்திரு வேலன்சுவாமிகளை மதத்தலைவர்கள் பலரும் வைத்தியசாலையில் பார்வையிட்டு வருகின்றனர்.
.

Post a Comment