எங்களை விற்காதீர்கள்:சுகாதார தொண்டர்கள்!

திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்ட வடக்கு சுகாதார தொண்டர்கள் ஒரு லட்சம் வேலைவாய்ப்பு திட்டத்திற்குள் உள்வாங்கப்படுவார்கள் என்ற அறிவிப்பின் மத்தியில் யார் அதனை பெற்றுக்கொடுத்தவர் என்பதில் பங்காளிகள் முட்டி மோத தொடங்கியுள்ளனர்.

ஆயினும் தங்களை வைத்து கட்சிகள் வயிறுளு வளர்ப்பதாக சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு ஜனாதிபதி இணக்கம் என ஈபிடிபி கூற அங்கயன் தரப்போ ஈபிடிபி பொய் சொல்வதாக குற்றஞ்சுமத்தியுள்ளது

யாழில் உள்ள மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக கடந்த 30 நாட்களாக சுகாதார தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். 

தமது போராட்டத்தைப் பல்வேறு இன்னல்கள், அசௌகரியங்கள் மத்தியில் முன்னெடுத்து வருகின்றனர். 

இந்த நிரந்தர நியமனம் அற்ற சுகாதார தொண்டர்கள் தொடர்பில் பல்வேறு உயர்தரப்பினருடன் கலந்துரையாடி வந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம்  ஜனாதிபதியுடன் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த சுகாதார தொண்டர்களின் நிரந்தர நியமனம் தொடர்பில் கூறி இந்த தொண்டர்களுக்கான தீர்வை தருமாறு கேட்டிருந்தார். 

இந்த குறித்து கேட்டறிந்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச புதிய அரசாங்கத்தால் செயற்படுத்தப்பட்டு வரும் “சுபீட்சத்தின் சநோக்கு” செயற்திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைய சுகாதார தொண்டர்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

அண்மையில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த விவசாய அமைச்சர் மகிந்தான அளுத்கமக்கேயையும் ,அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் சுகாதார தொண்டர்கள் சுகாதார உதவியாளர் நியமனம் தொடர்பில் கூறினார்கள். 

இச்சமயம் இது குறித்து தாம் ஜனாதிபதியின் நேரடிக் கவனத்திற்கு கொண்டுவந்து சுகாதார தொண்டர்களின் பிரதிநிதிகள் சிலரை கொழும்பில் ஜனாதிபதியை நேரடியாகச் சந்திப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்வதாக அமைச்சர் மற்றும் உறுதியளித்திருந்தார்.

அதற்கிணங்க அந்த சந்திப்பும் நடைபெற்று தற்போது ஜனதிபதியுடன் கலந்துரையாடி இந்த பிரச்சனைக்கான தீர்வும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக ஈபிடிபி தெரிவித்துள்ளது.

ஆயினும் அங்கயனே இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வை பெற்று கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments