வீதி ஒழுங்குகள் பற்றி குருமுதல்வர் அறிவிப்பு!மறைந்த ஆயர் தந்தை அவர்களின் திருவுடல் இன்று (04) மாலை பவனியாக பயணிக்க இருக்கும் வீதி ஒழுங்குகள் பற்றி குருமுதல்வர் அறிவித்துள்ளார்.

 * மாலை 3 மணிக்கு ஆயர் இல்லத்தில் இருந்து ஆயரின் திரு உடல் தாங்கிய ஊர்தி புறப்பட்டு  ......

*ஆஸ்பத்திரி சந்தியை வந்தடைந்து...

* அங்கிருந்து ஸ்டேடியம் சந்திக்கு சென்று...

 *அங்கிருந்து பெரிய கடை வழியாக.…..

* மன்னார் நகரப்பகுதியில் வந்தடைந்து..

* மன்னார் நகரப்பகுதியில் உள்ள வீதி சுற்றுவட்டம் வழியாக சென்று....

* சென். செபஸ்டியன் வீதியில் பயணித்து...

 *டெலிகொம் சந்தியை தாண்டி.....

 ஆயரின் திருவுடல் தாங்கிய ஊர்தி செபஸ்தியார் பேராலயத்தினை சென்றடய இருக்கின்றது.

                   எனவே இந்த ஒழுங்குகளை கடைப்பிடித்து ஆயருக்கு தமது அஞ்சலியை செலுத்த விரும்பும் மக்கள் பொது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் வீதியின் இருமருங்கும் அகன்று நின்று ஆயருக்கு தங்களது  இறுதி மரியாதையை செலுத்திக் கொள்ளலாம் என . மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் தெரிவித்துள்ளார்

No comments