பருத்தித்துறை மரணம்: கொரோனா மரணமே!பருத்தித்துறையில் இன்று இறந்த மூதாட்டி கொவிட் தொற்றினாலேயே உயிரிழந்துள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான 75 மூதாட்டி, கோப்பாய் கொரோனா சிகிச்சை வைத்தியசாலையில் வைத்தியம் பெற்று நேற்று வீடு திரும்பிய நிலையில் இன்று காலை உயிரிழந்திருந்தார்.

மரணத்தின் பின்னராக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கொரோனா தொற்றினால் மரணம் சம்பவித்தமை கண்டறியப்பட்டுள்ளது.


No comments