ஜநாவாவது ஆட்டுக்குட்டியாவது?ஜநாவாவது ஆட்டுக்குட்டியாவது என இலங்கை அரசு திரிய ஒருபுறம் அதன் படைகள் காணி பிடிக்க ஓடிக்கொண்டேயிருக்கின்றது.இந்ந்pலையில் இன்றைய தினம் பருத்தித்துறையில் மேற்கொள்ளப்படவிருந்த காணிபிடிப்பு தற்காலிகமாகஇடை நிறுத்தப்படுவதாக பருத்தித்துறை பிரதேச செயலர் அறிவித்துள்ளார்.பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் மூன்று பொதுமக்கள் குடும்பங்களுக்கு உரித்தான  நான்கு ஏக்கர் காணியை 16வது காலாட்படையின் தேவைக்காக இன்று செவ்வாய்கிழமை அளவீடு செய்ய அறிவிக்கப்பட்டிருந்தது.

காலை 9 மணிக்கு நில அளவீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மக்கள் அதனை தடை செய்ய குவிந்திருந்தனர்.இதனையடுத்து இன்று காலை 9.30 மணியளவில் அளவீடு தற்காலிகமாக இடை நிறுத்தப்படுவதாக பருத்தித்துறை பிரதேச செயலாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments