நீதி வேண்டும்! முல்லைத்தீவில் நடைபெற்ற போராட்டம்!!

முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. சர்வதேச மகளிர் தினமான இன்று முல்லைத்தீவில் தொடர் போராட்டத்தின் நான்கு ஆண்டு நிறைவடைகிற நிலையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் இன்று திங்கட்கிழமை முல்லைத்தீவு புனித இராஜப்பர் ஆலய முன்றலில்  ஆரம்பமாகி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு நிறைவடைந்திருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்ட தொடர் ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும்  தருணத்தில் எங்களுக்கான  நீதியை சர்வதேச சமூகம் விரைந்து வழங்க இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்துமாறு கோரி மகளிர் நாளில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தில் பங்குத்தந்தையர்கள், அரசியல் வாதிகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவுகள், சமூக  மட்ட பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 

No comments