ரிஷாட் தம்பிக்கு குண்டுதாரியுடன் தொடர்பு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் கொழும்பு மாவட்ட நிரந்தர சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லாஹ் இன்று (15) புத்தளத்தில் வைத்து சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹெஜாஸின் கைது தொடர்பில் பேசிய பொலிஸ் பேச்சாளர்,

"குறித்த சட்டத்தரணிக்கு தற்கொலை குண்டுதாரிகள் இருவருடன் தொடர்புகள் இருந்தது. குண்டுதாரிகள் இருந்த அமைப்பு ஒன்றில் அவரும் இருந்தார். இந்த குண்டுத் தாக்குதல்களை திட்டமிடுவதில் அவருக்குள்ள சில தொடர்புகள் குறித்து விசாரணை செய்கிறோம்" - என்றார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட்டின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் தொடர்பில் பேசும் போது,

"அவருக்கு தற்கொலை குண்டுதாரி ஒருவருடன் தொடர்பு இருந்தது. குறித்த குண்டுதாரியை ஹோட்டல் ஒன்றில் சந்தித்தார்" - என்றார்.

No comments