சுவிஸ் போதகர் விட்டபாடாகவில்லை

யாழ்ப்பாணத்தில் இன்று மேலும் இரண்டு பேருக்கு கொரோனோ வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்திய சாலைப் பணிப்பாளர்
த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழில் 23 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட இன்றைய பரிசோதனைகளில் பலாலியில் தனிமைப்படுத்தலில் இருந்த இரண்டு பேருக்கு மாத்திரமே கொரோனோ தொற்று இருப்பது இணங்காணப்பட்டுள்ளது.

யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமுதிக்கப்பட்டிருந் 4 பேர், பலாலி தனிமை படுத்தப்பட்ட நிலையம் 3 பேர், யாழ் மாநகர சுகாதார அதிகாரிபிரிவு 7 பேர், நல்லூர் சுகாதாரப் அதிகாரிபிரிவு 2 பேர், முழங்காவில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையம் 7பேர் என மொத்தமாக 23 பேருக்கு இன்று கொரோனோ பரிசோதனை செய்யப்பட்டது.

இவ்வாறாக பரிசோதனை செய்யப்பட்ட23 பேரில் 21 பேருக்கு கொரோனோ தொற்று இல்லை என  உறுதிப்படுத்தியுள்ளது. அதே நேரம் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட இரண்டு பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் யாழ் போதனாவில் ஏற்கனவே ஒருவர் முதலாவது கொரோனோ நோயாளியாக அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் பலாலி தனிமைப்படுத்தலில் கடந்தவாரம் 6 பேர் வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று 8 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இவர்களுடன் இன்று 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறாக யாழ்ப்பாணத்தில் மட்டும் இதுவரையில் 17 பேர் கொரோனோ வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியதாக பரிசோதனைகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்ட இரண்டு பேர் தற்போதும் தொற்று உறுதிப்படுத்தப்படாமல் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கின்றனர்.

இதேவேளை இவ்வாறு யாழில் வைரஸ் தொற்றில் அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் யாழ் அரியாலையில் மதவழிபாடு நடாத்த சுவிஸ் நாட்டிலிருந்து வந்த போதகருடன் தொடர்புபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments