பயங்கரவாதத்துடன் எனது தம்பிக்கு தொடர்பில்லை!

ஈஸ்டர் தாக்குதலை நடத்தியவர்களுக்கும் தனது சகோதரர் ரியாஜ் பதியுதீனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ரியாஜ் பதியுதீனின் கைது குறித்து இன்று (15) இரவு முகப்புத்தகத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர் இதனைக் கூறியுள்ளார்.

நானோ, எனது குடும்பத்தினரோ எந்தவித பயங்கரவாத  நடவடிக்கைகளிலும் சம்பந்தப்பட்டவர்களில்லை, எனது தம்பியின் கைது அரசியல் பழிவாங்கல். இதற்கெதிராக நாம் நீதிமன்றை நாடவுள்ளோம்.

ரியாஜ் கைது நடந்தது முதல் இனவாத ஊடகங்கள் பல ஏதோ குற்றவாளியை போல் பொய்யான செய்தியை வெளியிடுக்கின்றன - என்றும் ரிஷாட் பதியுதீன் கூறினார்.

No comments