மந்திகையில் குழப்பம்:சிகிச்சைகள் தடைப்பட்டது?


கொரோனோ சந்தேகத்திற்குரிய வகையில் சடலம் ஒன்று அதிகாலை மந்திகை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதையடுத்து அங்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.போதிய முன்னெச்சரிக்கை இன்றி மாரடைப்பென ஒப்படைக்கப்பட்டரது; சடலத்தை பொறுப்பேற்றுள்ளனர்.எனினும் போதிய அவதானமின்றி சடலம் கையாளப்பட்ட நிலையில் தற்போதே கொரோனா தொற்று தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து காலை வேளை சிகிச்சைக்கென வருகை தந்த நோயாளர்களில் ஒரு பகுதியினருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு இது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் நோயாளிகள் இடையில் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.

எனினும் தற்போதைய சூழலில் சிகிச்சைக்கென வந்தவர்களை தனிமைப்படுத்துவது மற்றும் அடையாளப்படுத்துவது தொடர்பில் அத்தியட்சகருடன் கலந்துரையாடி சிகிச்சைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  

No comments