மந்திகையும் தயார் நிலையில்:சடலமாக ஒப்படைப்பு?


நோயாளியொருவரது மரணத்தை அடுத்து மந்திகை வைத்தியசாலை கொரோனா அச்சத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தாதியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆடைகள் தீக்கிரையாக்கப்பட்டு பாதுகாப்பு பொறிமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே மந்திகை வைத்தியசாலையில் குறித்த சடலமாக ஒப்படைக்கப்பட்டவர் மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே முன்னர் மாரடைப்பில் தப்பி பிழைத்த அவர் இரண்டாவது முறை மாரடைப்பில் உயிரிழந்துள்ளார்.
முன்னதாக நெல்லியடியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட அவர் மாரடைப்பினால் மோசமாக பாதிக்கப்பட்டு மந்திகை வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.எனினும் வைத்தியசாலையை வந்தடைய முன்னரே அவரது உயிர் பிரிந்துள்ளது.

இந்நிலையில் அவர் மீது கோரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகத்தில் மந்திகை வைத்தியசாலை பிரேத அறையில் சடலம் தனித்து வைக்கப்பட்டுள்ளது.

அவரது உயிரிழப்புக்கு கோரோனா தொற்று காரணமாக இருக்கலாமா? என்று பரிசோதனை செய்வதற்கு சடல மாதிரிகள் பெறப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

பருத்தித்துறையைச் சேர்ந்த 58 வயதுடைய அவர் கடந்த பெப்ரவரி 7ஆம் திகதி கம்பொடியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளார்.

தோடர் சிகரெட் பாவனையாளரான அவர் கடந்த மூன்று நாள்களாக அவருக்கு காய்ச்சல், தடிமன் உள்ளிட்டவை காணப்பட்டதால் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் இன்று அதிகாலை மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட வேளை அவர் உயிரிழந்துள்ளார்.

No comments