இலங்கையர் நால்வருக்கு கொரோனா!

இந்தியாவில் இடம்பெற்ற மத நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கையர்கள் நால்வருக்கு கொரோனா இருப்பது இந்தியாவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் டெல்லி - நிசாமுடினில் தப்லிக் ஜமாத் மார்கஸ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அங்கு சென்ற இந்தியர்கள் பலருக்கு கொரோனா இருப்பது முன்னதாக உறுதியாகியிருந்தது.

இந்நிலையிலேயே குறித்த இலங்கையர்கள் நால்வருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இதேவேளை குறித்த மத நிகழ்வில் கலந்து கொண்ட 33 இலங்கையர்கள் உட்பட பலரது விசாக்கள் கறுப்பு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments