கொரோனா:யாழிலேயே இனி பரிசோதனை!


எதிர்வரும் புதன் கிழமை முதல் யாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் முடியுமென யாழ் போதனா வைத்தியசாலை
பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதனிடையே கொரோனா தொற்றிற்குள்ளான 33பேர் நோய் தொற்று இல்லையென திருப்பி அனுப்பி வைக்கப்பட்டள்ளார்.ஒருவர் மட்டும்; கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் கொழும்பிற்கு மேலதிக சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் மேலும் அனலைதீவிலிருந்து ஒருவர் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.அவரது மாதிரிகள் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் புதன்கிழமை முதல் யாழில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலுள்ள இயந்திர தொகுதியை இயக்கி இப்பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக யாழ்.போதனாவைத்தியசாலை பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

இதனால் யாழிலேயே நோயாளிகளை இனங்காண முடியுமென நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments