பாஸ்டர் தகவலை பகிர மறுக்கும் சுவிஸ் மருத்துவமனை?


அரியாலைப் பகுதியில் பிரார்த்தனை நடத்திய மதகுருவுக்கு தொற்று இருப்பது பற்றிய உறுதிப்படுத்தலை வழங்க அவர் சிகிச்சை பெற்றுவரும் சுவிஸ் வைத்தியசாலை பின்னடிப்பதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.சுவிஸ் போன்ற நாடுகளில் நோயாளிகளது மருத்துவம் பற்றிய இரகசியங்களை வெளிப்படுத்த வைத்தியசாலைகள் தயாராக இல்லை.இதனால் அவருடன் பழகியவர்களில்  சிலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

மத குருவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அவரோடு நேரடியாக தொடர்பு கொண்ட அனைவரும் அவர்களது வீட்டில் இரண்டு கிழமைகள் தனியாக இருந்து கொள்ள வேண்டும்.

அவ்வாறானவர்களினள் சுவாச வியாதி மற்றும் ஏனைய பிரச்சினைகள் ஏற்படுகின்றபோது வைத்தியசாலையுடன் தொடர்புகொண்டு வைத்திய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவரோடு நேரடி தொடர்பு கொண்ட ஒருவருக்கு சுவாச மற்றும் அதனோடு தொடர்புடைய வியாதிகள் ஏற்படுகின்றபோது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொற்று இருக்கின்றதா என்ற பரிசோதனை மேற்கொள்ளப்படுவது வழமையாகும்.

ஆனாலும் தற்போது கொழு;பிலுள்ள தூதரகம் ஊடாக தகவலை உறுதிப்படுத்த சுகாதார அதிகாரிகள் முற்பட்டுள்ளனர்.

கொழும்பிலுள்ள ஆளுநர் அதனை செய்து தர முன்வந்திருப்பதாகவும் தூதரகத்திற்கு அறியத்தரப்பட்டிருப்பதால் அவர்களது பதிலிற்கு காத்திருப்பதாகவும் சுகாதாதரப்பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

No comments