மூடி மறைக்கப்படுகின்றதா கொரோனோ தொற்று அறிக்கைகள்?


கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பிலான மருத்துவ அறிக்கைகளை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கொழும்பின் அழுத்தங்களால் மறைக்கின்றாராவென்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பில் சக மருத்துவ அதிகாரிகள் தமது சந்தேகத்தை சான்றுகளுடன் அம்பலப்படுத்தியுள்ளனர்.

நேற்றைய தினம் இரவு வந்திருக்கவேண்டிய அறிக்கைகளை அவர் வரவில்லையென்கிறார்.அவரால் வெளிப்படுத்தப்பட்ட அறிக்கைகள் மிகவும் பழையவை.எத்தகைய அரசியல் பின்புலத்தில் அவ்வாறு அவர் செயற்படுகின்றாரென்பது தெரியவில்லையெனவும் தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத மருத்துவ அதிகாரியொருவர் தெரிவித்தார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இளைஞவரான சத்தியமூர்த்தி அரசியல் பின்புலத்தில் நியமிக்கப்பட்டமை பெரும்பாலான சிரேஸ்ட மருத்துவ அதிகாரிகளிற்கு விருப்பமற்றதொன்றாகவே உள்ளது.அதிலும் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜிதவுடன் அவரது நெருக்கம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் பெரும்பாலான சிரேஸ்ட வைத்திய அதிகாரிகள் சத்தியமூர்த்திக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர்.

சுமார் 600 வரையான வைத்தியர்களை கொண்டுள்ள வைத்தியசாலையில் பணிப்பாளர் தான் திட்டமிடுகின்றவற்றை அமுல்படுத்த முடியாத நெருக்கடி இதனால் தொடர்கின்றது.

இது தற்போதைய நெருக்கடியான கொரோன வைரஸ் பரவல் சூழலில்; முனைப்பு பெற்றுள்ளதென அவருடன் நெருங்கிய வைத்திய அதிகாரிகள் தரப்பில் வழங்கப்படுகின்ற விளக்கமாக உள்ளது.

இந்நிலையில் கொரோனா தாக்கத்திற்குள்ளானவர்கள் என சந்தேகிக்கப்படுவோரது மாதிரிகள் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டே பரிசோதனை அறிக்கை பெறப்படுகின்றது.

அவ்வறிக்கைகள் மாற்றப்படுகின்றன அல்லது மூடிமறைக்கப்படுகின்றன.உண்மைகள் வெளிக்கொணரப்படவில்லை.

தனது வைத்தியசாலைக்கு கொரோனோ தொற்றுக்குள்ளானவர்கள் என்போரை அனுமதிக்க அவர் பின்னடிக்கின்றார்.

ஏனைய வைத்தியசாலைகளிலிருந்து யாழ்.போதனாவைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கும் நோயாளர்களை ஏற்க மறுப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுகின்றன.

அதற்கேதுவாக நாளுக்கொரு தகவலை ஊடகங்களை கூட்டி அவர் வெளியிடுகின்றார்.அதற்கென கும்பலொன்றை வைத்துள்ளார்.

அவரது மருத்துவ அறிக்கைகள் காரணமாக தொடர்நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது ஏனைய மருத்துவ துறைசார்ந்த அனைவரும் திண்டாடுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.  

No comments